தேனி: நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ரூ.53 லட்சம் மோசடி; டிராக்டர் நிறுவன ஊழியர்கள் சிக்கியது எப்படி?

​​தேனியில் சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இங்கு கடந்த ஆண்டு ​கெளமாரியம்மன் டிராக்டர்ஸ் நிறுவனம்​ மூலம், 8 நபர்களுக்கு மொத்தம் 53,34,485 ரூபாய்க்கு கடன் உதவி​ அளிக்கப்பட்டது. ஆனால், கடன் பெற்றவர்கள் யாரும் தவணைத் தொகையைச் செலுத்தவில்லை. இது குறித்து விசாரித்தபோது, டிராக்டர் நிறுவனத்தினர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாரிடம் புகாரளிக்கப்பட்டு, ஆறு பேர்மீது வழக்கு பதிவுசெய்து, ஆறு டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். ​

மீட்கப்பட்ட டிராக்டர்கள்

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ​​“தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் `​கெளமாரியம்மன் டிராக்டர்ஸ்’ என்ற நிறுவனம்​ செயல்பட்டுவருகிறது. இங்கு ​​கடந்தாண்டு கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சரவணன், ஆரோக்கியம், சுருளியப்பன், நாகேந்திரன், அன்புதுரை, குமார், போடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த செந்தில் குமார், மணிகண்டன் ஆகியோரின் பெயரில் தலா ஒரு டிராக்டர் வீதம் எட்டு​ ​டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. 

​இதற்காக தேனியிலுள்ள ​சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தின் மூலம் ​​எட்டு பேருக்கும் மொத்தத்தில், 53,34,485 ரூபாய்க்கு கடன் உதவி வழங்கப்பட்டு, அந்தத் தொகை சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்​டிருக்கிறது.‌ இதையடுத்து, ​​சம்பந்தப்பட்ட எட்டு​ ​நபர்களின் கணக்கிலிருந்து முதல் தவணை மட்டும் நிதி நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல மாதங்களாக தவணைத் தொகை செலுத்தாமல் நிலுவையில் இருந்திருக்கிறது.‌

வெயில் மாணிக்கம்

​இதன் காரணமாக நிலுவையிலுள்ள ​​மாதத் தவணைத் தொகையைச் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட நபர்களிடம் நிதி நிறுவனத்தினர் கேட்​டிருக்கின்றனர். அப்போது, சம்பந்தப்பட்டவர்கள்​ டிராக்டர்களைத் தாங்கள் யாரும் வாங்கவில்லை எனவும், ​மத்திய அரசு திட்டத்தின்கீழ் ரூபாய் 10,000 முதல் 15,000 வரை நிதியுதவி செய்து தருவதாகக் கூறி, ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை, டிராக்டர் விற்பனை நி​றுவனத்தில் பணிபுரியும் மேலாளர் பாலமுருகன், விற்பனையாளர் மதன் ஆகியோர் பெ​ற்றுச் சென்றனர் எனவும் கூறியிருக்கின்றனர். 

​மோசடியில் ஈடுபட்ட விற்பனை நிறுவனத்தினரிடம் விளக்கம் கேட்டதற்கு, சரிவர பதில் அளிக்காமல் அவர்களை மிரட்டியிருக்கின்றனர். இதற்கிடையே குமார், நாகேந்திரன், அன்புதுரை ஆகியோர் பெயரில் விற்பனையாகிப் பதிவுசெய்யப்பட்ட மூன்று ​டிராக்டர்களை நிதி நிறுவனத்தினர் கையகப்படுத்தியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, மணிகண்டனின் பெயரில் இருந்த டிராக்டரை கையகப்படுத்தியதில், அதன் இன்ஜின், சேசிஸ் எண்களை வேறொரு வாகனத்துக்கு மாற்றியிருந்தது தெரியவந்தது.

டிராக்டர்

​இது தொடர்பாக ​நிதி நிறுவனத்தின் சார்பில் தேனி கிளை மேலாளர் வெயில் மாணிக்கம் ​அளித்தப் புகாரின்பேரில், ​​டிராக்டர் விற்பனை நிறுவன​ உரிமையாளர்களான பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சந்திரமோகன், நிலக்கோட்டையைச் சேர்ந்த கார்த்தி, போடியைச் சேர்ந்த சரண்யா, சதீஸ்குமார், மேலாளரான கம்பம் பாலமுருகன், விற்பனை பிரதிநிதியான நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த மதன் ஆகிய ஆறு பேர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். ​மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ராஜாங்கம் என்பவரைக் கைதுசெய்து, அவர் மூலமாக ஆறு​​​​​ ​டிராக்டர்களைப்​​ பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர். ​

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.