தானே,மஹாராஷ்டிராவில் இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து 28.3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை, மர்ம நபர்கள் அபகரித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த நபர், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இறந்துள்ளார்.
இந்நிலையில், தனியார் வங்கியில் அந்நபர் வைத்திருந்த வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க, அவரது தந்தை வங்கிக்கு சென்றுள்ளார்.
தன் மகன் இறந்த விபரத்தை குறிப்பிட்டு, பணத்தை எடுப்பதற்கான சான்றிதழையும் தந்துள்ளார்.
இதையடுத்து, இறந்தவரின் சேமிப்பு கணக்கை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, 2021ம் ஆண்டு செப்., முதல் 2022ம் ஆண்டு ஏப்., மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில், அவரது கணக்கில் இருந்து 28.3 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் அபகரித்தது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி சார்பில் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement