அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
லியோ விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் தினமும் போய்க்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் முதல் சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்கள் வரை இப்படத்தை பற்றி பேசிக்கொண்டே தான் இருக்கின்றனர். அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார் லோகேஷ். இதையடுத்து இவர் விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது
விறுவிறுப்பு கடந்த டிசம்பர் மாதம் லியோ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதையடுத்து காஷ்மீரில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கடுமையான குளிரிலும் அசராது உழைத்து லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. மேலும் காஷ்மீரில் படக்குழு சந்தித்த சவால்களை பற்றி ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்டனர் படக்குழுவினர். இந்நிலையில் லியோ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைத்து படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகின்றார் லோகேஷ்
எதிர்பார்ப்பு விக்ரம் படம் மாபெரும் வெற்றி என்பதாலும், விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதன் காரணமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் டிஜிட்டல் ரைஸ்ட் பலகோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாக இருப்பதாக தகவல் வந்ததால் இப்படத்தில் ரசிகர்கள் வித்யாசமான விஜய்யை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். மேலும் இப்படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூல் சாதனையை நிகழ்த்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
கண்டிஷன் போடும் விஜய் இந்நிலையில் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜிற்கு கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டு வருவதாக ஒரு சில வதந்திகள் பரவி வருகின்றன. அதாவது காஷ்மீரில் அவுட்டோர் படப்பிடிப்பினால் பல கஷ்டங்களை படக்குழு அனுபவித்ததால் இனி அவுட்டோர் படப்பிடிப்பு வேண்டாம், செட்டிலேயே படமாக்கிக்கொள்ளலாம் என விஜய் லோகேஷிடம் கூறிவிட்டாராம். இதையடுத்து இரவு நேர காட்சிகள் வேண்டாம், அதையெல்லாம் பகல் நேரத்தில் எடுக்குமாறு மாற்றவும் லோகேஷிடம் விஜய் கூறியதாக பேசப்பட்டு வருகின்றது. லியோ படத்தில் பெரும்பாலான காட்சிகளை இரவு நேரங்களிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ். இதையடுத்து விஜய் இவ்வாறு கூறியதால் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி வருகின்றாராம். இவ்வாறு சில வதந்திகள் வர இதெல்லாம் கண்டிப்பாக உண்மையாக இருக்காது என்பதே பலரது கருத்தாக இருக்கின்றது