ரம்ஜான் நோன்புக்கு சீனாவில் தடை உளவாளிகள் வைத்து கண்காணிப்பு| The ban on Ramadan fasting in China is being monitored by spies

பீஜிங், சீனாவில், உய்கர் முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு இருப்பதை கண்டறிந்து தடுப்பதற்காக, அந்நாட்டு போலீசார் உளவாளிகளை நியமித்துஉள்ளனர்.

வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் தன்னாட்சி பகுதியில், உய்கர் இன முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களை சீன அரசு பல ஆண்டுகளாகவே ஒடுக்கி வருகிறது.

கடந்த 2017 முதல், உய்கர் முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு இருக்க சீன அரசு தடை விதித்தது. தடையை மீறுவோர், முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

ரோந்து பணி

இந்த தடை உத்தரவில் 2021 – 22ல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 65 வயதுக்கு மேற்பட்ட உய்கர் முஸ்லிம்கள், ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

ரம்ஜான் மாதத்தின் போது வீடுகளில் புகுந்து சோதனையிடுவது, சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபடுவதை போலீசார் குறைத்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு இந்த தடுப்பு நடவடிக்கையை சீன போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

வயது, பாலின வித்தியாசம் இன்றி உய்கர் முஸ்லிம்கள் அனைவரும் ரம்ஜான் நோன்பு இருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடையை மீறி நோன்பு இருப்பவர்களை கண்டறிய, சீன போலீசார் உளவாளிகளை நியமித்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்துக்கும் 2 – 3 உளவாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பொது மக்கள், போலீசார் மற்றும் உய்கர் முஸ்லிம்களுக்கு உள்ளேயே உளவாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர் களை, ‘காதுகள்’என, போலீசார் அழைக்கின்றனர்.

சட்ட நடவடிக்கை

இவர்கள் கிராமங்களில் உள்ள குடும்பத்தினர் நோன்பு கடைப்பிடிக்கின்றனரா என்பதை கண்காணித்து போலீசுக்கு தகவல் அளிக்கின்றனர்.

உய்கர் முஸ்லிம்களின் வீடுகள், மசூதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சாலை ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சீன அரசை பொறுத்தவரை நோன்பு இருப்பது சட்டவிரோத செயலாக அறிவிக்கப்பட்டு இருப்பதால், தடையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.