Rajinikanth: அந்த கேரக்டரில் ரஜினிஜியை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது: ஷங்கருக்கு நோ சொன்ன ஆமீர் கான்

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த எந்திரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ரஜினியை வைத்து 2.0 படத்தை எடுத்து வெளியிட்டார் ஷங்கர். அந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்திருந்தார். ஏமி ஜாக்சன் ரோபோவாக நடித்தார்.

2.0 படத்தில் ரஜினிக்கு பதில் நடிக்குமாறு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஆமீர் கானிடம் கேட்டிருக்கிறார் ஷங்கர். அவர் சொன்ன கதை ஆமீர் கானுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டராகும் என நினைத்திருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இருப்பினும் 2.0 படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் ஆமீர் கான். அந்த கதாபாத்திரத்தில் ரஜினியை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது என்று ஷங்கரிடம் கூறியிருக்கிறார்.

இது பற்றி பேட்டி ஒன்றில் ஆமீர் கான் கூறியதாவது,

ரோபோ பற்றிய படம் அது. 2.0. நான் ஷங்கரின் மிகப் பெரிய ரசிகன். மேலும் நான் ரஜினிஜியின் தீவிர ரசிகன். 2.0 படத்தில் நடிக்குமாறு கேட்டார் ஷங்கர். கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எப்பொழுது கண்ணை மூடிப் பார்த்தாலும் ரஜினி சார் தான் வந்தார். அவரால் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்றார்.

ரஜினியை பற்றி ஆமீர் கான் கூறியதை கேட்ட தலைவர் ரசிகர்களுக்கு கண்கலங்கிவிட்டது. பாலிவுட் கொண்டாடும் நாயகன் நம் தலைவர் மீது இந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறாரே என்கிறார்கள்.

ரூ. 500 கோடி செலவில் எடுக்கப்பட்ட 2.0 படம் ரூ. 800 கோடி வசூல் செய்தது. ஆமீர் கான் நடிப்பில் கடைசியாக வெளியான படம் லால் சிங் சத்தா. டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக் தான் லால் சிங் சத்தா. ஆமீர் கான் சிறப்பாக நடித்திருந்தபோதிலும் அந்த படம் ஓடவில்லை.

ஃபாரஸ்ட் கம்ப் படத்தை பார்த்து ரசித்தவர்கள் எல்லாம் லால் சிங் சத்தாவை விளாசினார்கள். ஆமீர் கான் தற்போது நடிப்பில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார். நடிக்காவிட்டாலும் படங்களை தயாரிக்கப் போகிறாராம்.

ரஜினியோ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வெளியிட்ட கையோடு ரஜினியின் ஜெயலிர் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.

Aishwarya Rajinikanth:தனுஷுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கு 2 காதலர்கள், அதில் ஒருவர் தற்கொலை: பயில்வானை விளாசும் ரஜினி ரசிகர்கள்

பீஸ்ட் போன்று ஜெயிலரும் இருந்துவிடக் கூடாது நெல்சன் என ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

ஜெயிலரை அடுத்து ரஜினி படத்தை இயக்க பலர் ஆசையாக காத்திருந்தார்கள். ஆனால் அந்த வாய்ப்பு ஜெய்பீம் படம் புகழ் ஞானவேலுக்கு கிடைத்திருக்கிறது. தலைவர் 170 என அழைக்கப்படும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.