நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை சீரம் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தியது. இதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்று, கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கின.
அதே போல் கோவாக்சின் என்ற தடுப்பூசியும் உருவாக்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் மக்கள் அச்சுறுத்தி வருகிறது. ஆனால், போதிய தடுப்பூசி இருப்பு இல்லை. நோய் பரவல் குறைந்ததை அடுத்து தடுப்பூசி உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கோவிஷீல்டு தயாரித்த சீரம் நிறுவனம் மீண்டும் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியுள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி சுமார் 6 மில்லியன் இருப்பில் உள்ளது என்றும் இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அடுத்த 90 நாட்களுக்குள் 6 முதல் 7 மில்லியன் கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆதார் பூனாவாலா தெரிவித்தார்.
newstm.in