அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபாய் வரை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அரசியல் […]