ராஜாஜியின் கொள்ளு பேரன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன். காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், அக்கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி விலகினார்.

இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார். இதற்கிடையே, காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப் பேரன் கேசவன் கடந்த 8-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.வில் இணைந்த ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.