IPL 2023 | 'ஜியோ சினிமா' செயலி பயனர் பரிதாபங்கள்: சிக்கலில் இருந்து மீள்வது எப்படி?

நடப்பு ஐபிஎல் சீசனை ஜியோ சினிமா தளம் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த செயலியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே-வின் கேப்டன் தோனி பேட் செய்தபோது சுமார் 2.2 கோடி பேர் ஜியோ சினிமா வழியே போட்டியை பார்த்திருந்தனர். இருந்தாலும் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்தி வரும் பயனர்கள் சில சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மோசமான ஸ்ட்ரீமிங் குவாலிட்டி, போட்டிகளை நேரலையில் பார்க்கும் போது லேக் ஆவது, அதிகப்படியான டேட்டா பயன்பாடு மற்றும் செயலி சார்ந்த இன்னும் பிற சிக்கல்கள் குறித்து சமூக வலைதளத்தில் அதன் பயனர்கள் புகார் சொல்வதை பார்க்க முடிகிறது. இந்த சிக்கல் எல்லோருக்கும் இல்லை என்றாலும் பயனர்களில் சிலரேனும் எதிர்கொண்டு இருக்கலாம்.

ஜியோ சினிமா தளத்தில் 4K ரெஸல்யூஷனில் நேரலையில் ஐபிஎல் போட்டிகள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புக்கான டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் ‘வயாகாம் 18’ நிறுவனம் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இப்போது ஜியோ டிவி அல்லது ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க முடியும்.

தமிழ் உட்பட 12 மொழிகளில் ரசிகர்கள் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 50 பிரேம் என்ற துல்லியத்தில் புள்ளி விவரங்களுடன் கூடிய ஹைப் மோட், மல்டி கேமரா ஆங்கிள் வியூ, சாட் செய்யும் வசதி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகளவிலான வியூஸ் பெற்றது குறித்து ஜியோ சினிமா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் முந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீம் வியூவர்ஷிப்பின் முதல் வார தரவு குறித்த ஒப்பீடும் இருந்தது. தற்போது அதைக் காட்டிலும் ஜியோ சினிமா தளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. ஆனாலும், சில சிக்கல்கள் இந்த செயலியில் இருப்பதாக பயனர்கள் சொல்கின்றனர்.

— Anup Acharya (@anupacharya8) April 9, 2023

பயனர் அனுபவம்: ‘நான் 5ஜி போனை தான் பயன்படுத்தி வருகிறேன். 5ஜி நெட்வொர்க் இணைப்பில் நேரலையில் போட்டிகளை பார்த்து வருகிறேன். இருந்தாலும் எனது போனில் இந்த செயலியை பயன்படுத்தும் போது வேறு எந்தவொரு அக்சஸையும் என்னால் மேற்கொள்ள முடியவில்லை. உதாரணமாக நான் வாட்ஸ்அப் அல்லது ட்விட்டருக்கு செல்லலாம் என போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் பொது மினிமைஸ் செய்து வெளிவந்தால் செயலியின் இயக்கம் நின்று விடுகிறது. பேக்ரவுண்டில் இந்த செயலி இயங்கவில்லை. அதனால் நான் போட்டி முடியும் வரை இந்த செயலியை மட்டுமே எனது போனில் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

மற்றபடி எனக்கு வேறு எந்த சிக்கலும் இல்லை. ஹைப் மோட், மல்டி கேமரா ஆங்கிள், பல்வேறு மொழிகள், ஸ்டாட்ஸ் போன்றவற்றை இதில் பெற முடிகிறது. ஆனால் வெளியில் வந்தால் செயலி இயக்கம் நின்று விடுகிறது. அந்த ஒரு சங்கடம் மட்டும்தான் எனக்கு’ என தான் சந்தித்து வரும் சிக்கலை விவரிக்கிறார் ஜியோ சினிமா செயலி பயனர் ஒருவர்.

இப்படியாக பயனர்கள் ஒவ்வொருவருக்கும் ஜியோ சினிமா செயலி பயன்பாட்டில் சிக்கல்கள் உள்ளன. இந்த செயலிக்கு கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்தில் 3.9 ஸ்டார் ரேட்டிங்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 2.2. ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றுள்ளது.

சிக்கலை சரி செய்வது எப்படி?

  • பேஸிக் செக் அவசியம்: சமயங்களில் போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் செயலி பயன்பாட்டில் உள்ள சிக்கலில் இருந்து மீளலாம். அதை செய்தும் சிக்கல் தொடர்ந்தால் போனில் செயலியை அன்-இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யலாம். அதுவும் கைகொடுக்கவில்லை என்றால் போனின் இணைய இணைப்பை செக் செய்யலாம்.
  • லேட்டஸ்ட் வெர்ஷன் செயலியை பயன்படுத்த வேண்டும்: ஸ்ட்ரீமிங் செயலிகள் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை மேற்கொள்ளும். அதனால் பயனர்கள் தங்கள் போனில் செயலியின் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் ஆகியிருப்பது அவசியம். இது குறித்த நோட்டிபிகேஷன் சம்பந்தப்பட்ட செயலி சார்பில் கொடுக்கப்படும்.
  • சமயங்களில் செட்டிங்ஸ் சென்று ஜியோ சினிமா ஆப் டேட்டா அண்ட் Cache-னை க்ளியர் செய்யலாம். இதை செய்தால் மீண்டும் லாக் இன் செய்ய வேண்டும்.
  • செயலியை ஃபோர்ஸ் ஸ்டாப் செய்யலாம்
  • ஆப் பர்மிஷனை செக் செய்து பார்க்கலாம்
  • இன்டர்னல் ஸ்டோரேஜ் திறனின் அளவு குறித்தும் பார்க்கலாம். அது 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி இருந்தால் தேவையில்லாதவற்றை டெலீட் செய்யலாம். சமயங்களில் மெமரி ஃபுல் ஆகிற காரணத்தாலும் போனின் இயக்கம் ஸ்லோவாகும்.
  • இது எல்லாம் செய்தும் பயன்பாட்டில் சிக்க தொடர்ந்தால் [email protected] அணுகலாம். ஜியோ சினிமாவை சமூக வலைதளத்தின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.