சென்னை: தமிழ் என்ற வடிவில் 100 ஏக்கரில் மாபெரும் வனம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில், நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழ் என்ற வடிவில் 100 ஏக்கரில் மாபெரும் வனம் உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுசூழல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக மெய்யநாதன் கூறியதாவது:- “தமிழ் என்ற வடிவில் 100 ஏக்கரில் மாபெரும் வனம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில், நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் 25 இடங்களில் காற்று தர கண்காணிப்பு அமைக்க இருக்கிறோம்.
இதற்காக 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குப்பை கிடங்குகள் மோசமாக இருந்த நிலையை பார்த்தோம். அது நிலத்திற்கு மட்டும் அல்ல. காற்றையும் அதிகம் மாசுபடுத்தக்கூடிய நிலை அறிந்து முதல்வர் அவர்கள் நகர்புற வளர்ச்சி அமைச்சர் மூலமாக தமிழ்நாட்டில் தேங்கியிருக்கிற 269 குப்பை கிடங்குகள் கண்டறியப்பட்டு 180 இடங்களில் பயோ மைனிங் முறையில் அகற்றும் முறையில் மேற்கொண்டு வருகிறார்கள்.
132 ஏக்கர் உயிர் நிலங்கள் மீட்கபப்ட்டு 51,600 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் தமிழ்நாடு குரோமியம் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் இயங்கியது. அந்த பகுதியில் குரோமிய கழிவுகள் தேங்கியிருந்தது. மிக மிக ஆபத்தானது.
அதனை நேரடியாக பார்வையிட்டு அந்தந் குரோமிய கழிவுகளை மக்கள் பாதிக்கப்படாத வகையில், நீர் நிலைகள் பாதிக்கப்படாத வகையில் ரூ. 15 கோடியில் நிறைவேற்ற இருக்கிறோம். புவி வெப்பயமாதலை தடுக்க பசுமை இல்ல கார்பன் டை ஆக்சைடு கட்டுப்படுத்தும் இலக்கை 2070 ல் அடைவோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், கார்பன் நியூட்ரல் என்ற நிலையை தமிழகம் 2070-க்கு முன்பாகவே எட்டும் என்ற மிகப்பெரிய அறிவிப்பை கொடுத்து இருக்கிறார்.
தமிழ்நாட்டின் மொத்த பரப்பு 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர கி.மீட்டர். தற்போதைய வனத்தின் பரப்பு 31 ஆயிரம் சதுர கி.மீட்டர். இதை 33 ஆயிரம் உயர்த்த்த வேண்டும் என்றால் 42 ஆயிரத்து 919 சதுர கி.மீட்டராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் அனைத்து வனங்களும் பாதுகாக்கப்படும். அந்த இலக்கை எட்டுவதற்கு 13 ஆயிரத்து சதுர கி.மீட்டர் நாம் மரங்களை நட்ட வேண்டும்.
நமக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் 100 ஏக்கர பரப்பளவில் ஒரு மாதிரிக் காடு உருவாக்கப்படும். நிலவில் இருந்து செயற்கை கோளில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாட்டில் தமிழ் என்று தெரியும் வகையில் ஒரு உலகத்தரம் வாய்ந்த திட்டம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.