தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கரில் மாதிரி காடுகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
அதேபோல, தமிழக சட்டசபையில் இன்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பதிலுரை வாசித்தார். அதில், வனத் துறையின் 2023-2024ஆம் ஆண்டிற்கான 7 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போதைய அறிவிக்கப்பட்ட வனப்பகுதி (Recorded Forest Area) 22,418 சதுர கிலோ மீட்டர்.
இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 17.24 சதவீதம் ஆகும். வனப்பகுதி மற்றும் வனப்பகுதிக்கு வெளியே உள்ள
பசுமை பரப்பை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் மொத்த பசுமை போர்வை (Green Cover) 30,843 சதுர கிலோ
மீட்டர் ஆகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 23.71 சதவீதம் ஆகும். இதனை, 33 சதவீதமாக உயர்த்துவதற்கு கூடுதலாக 12,076 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், பத்து வருடங்களில் 260 கோடி மரங்கள் நட்டு வளர்ப்பதற்கு ”பசுமை தமிழ்நாடு இயக்கம்” தொடங்கப்பட்டுள்ளது.
வனத் துறையின் 2023-2024ஆம் ஆண்டிற்கான
(Announcement) அறிவிப்புகள்.
1. திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
அமைக்கப்படும்.
2. தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் 15.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
3. பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
4. ராம்சார் தளம் – வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 9.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
5. ராம்சார் தளம் – கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 6.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
6. பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் 3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
7. அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 1.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
6. பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் 3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
7. அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 1.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
யானை
தமிழ்நாட்டில் தோராயமாக 2800 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஏற்கனவே நான்கு இடங்களில் யானைகள் காப்பகங்கள் உள்ளன. அத்துடன், புதியதாக 5வது யானைகள் காப்பகமாக 1200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அகஸ்தியமலை யானைகள் காப்பகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருதினை “The Elephant Wishperers” என்ற ஆவணப்படம் முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்டது. அப்படத்தில் நடித்த பொம்மன், பெல்லி தம்பதியர் உட்பட 91 யானை பாகன்கள் (Mahout) மற்றும் உதவி
யானை பாகன்களை (Cavadi) கௌரவிக்கும் வகையில் தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் 91 லட்சம் வழங்கப்பட்டது.
அத்துடன், அவர்கள் வசிக்க தேவையான சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகள் கட்டுவதற்கு ரூபாய் 9 கோடியே, 10 லட்சம் (தலா 10 லட்சம் வீதம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆவணப் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திகி
கான்சால்வ்ஸுயைக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி முதலமைச்சரால் கெளரவிக்கப்பட்டது.