பார்க்கின்சன்ஸ் நோய் என்கிற உதறுவாதம்; காரணங்களும் தீர்வுகளும்! |#Visual Story

2023-ம் ஆண்டுக்கான `உலக பார்க்கின்சன்ஸ் தினம்’ ஏப்ரல் 11 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. அந்த நாளில், பார்க்கின்சன்ஸ் நோய் (Parkinson’s disease) குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

Old age

உதறுவாதம் என்று அழைக்கப்படும் பார்க்கின்சன்ஸ் நோய் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதை நரம்பு மண்டலக் கோளாறு (Neuro degenerative disorder) எனக் கூறலாம். இத்தொல்லை சிறிய அளவில் ஆரம்பித்து பல வருடங்களில் படிப்படியாக அதிகரித்து, உடலின் செயல் திறனைக் குறைத்து மரணத்தில் முடிவடையும்.

மனித மூளை

நோய் வர காரணம்: மூளையில் உள்ள டோபாமைன் எனும் திரவம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆனால் எதனால் இத்திரவம் குறைகிறது என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை.

முதுமை

முதுமை, தலைக்காயம் மற்றும் 15 -20 சதவிகித நோயாளிகளுக்கு பரம்பரையாக இந்த நோய் வர வாய்ப்பு அதிகம். சதை இறுக்கம், நடுக்கம், நிலை தடுமாறுதல், மெதுவாகச் செயல்படுவது போன்றவை இந்நோயின் அறிகுறிகள். 

முதுமை

ஒரு காரியத்தை செய்வதற்கு தாமதம் ஏற்படும். நடப்பதற்கு சிரமப்படுவது, காலை சிறு சிறு அடியாக எடுத்துவைத்து மெதுவாகத் தள்ளாடி நடப்பது, உடை உடுத்துவது, உணவு உண்பதற்கு அதிக நேரம் தேவைப்படுவது என்று இருப்பர். குரல் வளம் குறையும்.

கையெழுத்து

கையெழுத்து சிறியதாக மாறும், முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது. 

Representational Image

இந்நோயின் முக்கிய அறிகுறியே நடுக்கம் தான். இது மெதுவாக கையில் ஏற்பட்டு படிப்படியாக உடல் முழுவதும் தோன்றும். தொடக்கத்தில் கையில் ஒரு மாத்திரையை வைத்து எப்பொழுதும் உருட்டிக்கொண்டு இருப்பதுபோல் (pill-rolling motion) செய்து கொண்டிருப்பார்கள். 

முதுமை

இந்த நடுக்கம் ஏதாவது ஒரு வேலையைச் செய்யும்போது நின்று விடும். சுமார் 30% நோயாளிகளுக்கு நடுக்கம் இல்லாமலேயே இருக்கும். நாக்கில் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும்.

முதுமை

பொதுவாக அறுபது வயது கடந்தவர்களிடம் தான் இந்நோயைக் காணமுடிகிறது. சமீப காலத்தில் இளம் வயதினருக்கும், சுமார் நாற்பது வயதிலேயே இந்நோய் சிலருக்கு வருகிறது. அதற்கு சரியான காரணம் தெரியவில்லை.

மலச்சிக்கல்

இந்நோய் ஆரம்பம் ஆவதற்கு சுமார் 5-10 ஆண்டுகளுக்கு முன்பே மலச்சிக்கல் தோன்றும். இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தால், உதறுவாதத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டு தக்க சிகிச்சையளிக்க முடியும். 

சிகிச்சை
| மாதிரிப்படம்

இந்நோய்க்கு பல சிகிச்சை முறைகள் உண்டு. அதாவது மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, இயன் முறை சிகிச்சை மற்றும் மாற்று சிகிச்சை முறைகள்.

மருந்துகள்

பாதிக்கப்பட்ட மூளையின் திசுக்களை எந்த வித மாத்திரைகளாலும் பழைய நிலைக்குக் கொண்டு வரவோ தடுத்து நிறுத்தவோ முடியாது. ஆனால் மருந்துகள் மூலம் நோயின் தொல்லைகளிலிருந்து ஓரளவிற்கு நிவாரணம் கிடைக்கும். 

உடற்பயிற்சி

நோய் தீவிரம் அடையும் போது இயன்முறை சிகிச்சை நிபுணர் ஆலோசனைப் படி உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும்.

அறுவை சிகிச்சை

மருந்துகள் மூலம் குணம் அடையாதவர்கள் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையில் செய்யும் அறுவை சிகிச்சை மூலம் சற்று குணம் அடைய வாய்ப்புண்டு.

Representational image

ஆழ்மூளை தூண்டல் அறுவை சிகிச்சை (Deep brain stimulation) சதை இறுக்கத்தையும், நடுக்கத்தையும் குறைக்க மிகவும் உதவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.