செங்கல்பட்டு: சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடைந்து இருக்கும் நிலையில், ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருக்கிறார். கலைஞர் நூற்றாண்டு முனையம் என்ற பெயரில் அது பயன்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.