Aishwarya Rajinikanth:ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடியவர்களுக்கு ஜாமீன்!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டின் லாக்கரில் இருந்த தங்க வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனதாக சமீபத்தில் போலீஸில் புகார் அளித்தார். மேலும் தங்களின் வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது புகாரில் கூறியிருந்தார்.

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
Rajinikanth: மீனாவுக்கு இன்னும் என்மேல அந்த கோபம் இருக்கு… போட்டுடைத்த ரஜினிகாந்த்!

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த பணி பெண், ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசனுடன் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக நகைகளை திருடியது தெரிய வந்தது. மேலும் திருடிய நகைகளை மயிலாப்பூரில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததோடு அந்த பணத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் வீடு ஒன்று வாங்கியதும் தெரியவந்தது.

மேலும் இருவரிடம் இருந்து 100 சவரனுக்கு மேல் நகைகள் கைப்பற்றப்பட்டன. ஐஸ்வர்யா புகாரில் கூறியிருந்ததை விட அதிக நகைகள் கைப்பற்றப்பட்டதால் காணாமல் போன நகைகள் குறித்த முழு தகவலை ஐஸ்வர்யாவிடம் கேட்டனர் போலீசார். இதையடுத்து 200 பவுன் நகைகள் காணாமல் போனதாக இரண்டாவதாக ஒரு புகார் அளித்தார் ஐஸ்வர்யா.

Shakeela: 22 வருஷம் ஆயிடுச்சு… இன்னும் அப்படியேதான் பார்க்கிறாங்க… ஷகீலா உருக்கம்!

மேலும் காணாமல் போன நகைகளை அடையாளம் காண தங்கள் வீட்டு கல்யாண ஆல்பத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்தார் ஐஸ்வர்யா. இது தொடர்பாக புதிய வழக்கு பதிவு செய்த போலீசார் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் சுமார் 50 பவுன் நகை ஈஸ்வரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. டிரைவர் வெங்கடேசனிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Suriya: அவர் படத்தில் நடிக்க கூடாது… சூர்யாவுக்கு ஆர்டர் போட்ட ஜோதிகா… பயில்வான் பரபரப்பு தகவல்!

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 2 நாள் காவலுக்கு பிறகு இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கியும் அது குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லாததால் நகைகள் இருந்த லாக்கரில் கை வைத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார் ஈஸ்வரி. மேலும் தன்னை ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என்று கூறியும் தனது கணவரை நம்ப வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bala: அய்யோ… பாலாவா இது.. அறுவை சிகிச்சைக்கு பிறகு வெளியான ஷாக்கிங் போட்டோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.