புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு வெப்பம் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், வடமேற்கு பகுதிகள் மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர, ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் ஐந்து புள்ளிகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.