சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது ருத்ரன்.
ருத்ரன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, படத்தை வெளியிட தடையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபடி நாளைய தினம் ருத்ரன் படம் ரிலீசாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ராகவா லாரன்சின் ருத்ரன் படம் : நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2, ஜிகிர்தண்டா 2 என அடுத்தடுத்த படங்களில் ரொம்பவே பிசி. இந்நிலையில் நாளைய தினம் தமிழ் புத்தாண்டையொட்டி அவரது ருத்ரன் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தின் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமைக்காக ரெவன்சா குளோபல் வென்சர்ஸ் மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இடையில் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், இதில் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்சா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இந்தத் தடையை நீக்கக்கோரி படத்தின் தயாரிப்புத்தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தின் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திட்டமிட்டபடி நாளைய தினம் திரையரங்குகளில் ருத்ரன் படம் ரிலீசாகவுள்ளது.
இதனால் தயாரிப்பு தரப்பு மற்றும் நடிகர் லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகமளித்தது. படத்தின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களிலும் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் சிறப்பாக நடனமாடியுள்ளனர். படத்தின் ரீமிக்ஸ் பாடலும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் ரிலீசாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்ததால், படத்தின் புக்கிங்கிலும் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நாளைய தினம் படம் ரிலீசாவதில் எந்த சிக்கலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தற்போது படத்திற்கான டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளது. நாளைய தினம் வெளியாகவுள்ள படங்களில் ருத்ரன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் அதிகரித்துள்ளது.
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின்மூலம் இயக்குநராகவும் களமிறங்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. பொழுது போக்கு படங்களுக்கான அம்சங்கள் இந்தப் படத்திலும் அதிகமாக உள்ளதாகவும் படத்தின் அம்மா சென்டிமெண்ட்தான் படத்தில் தான் நடிக்க காரணம் என்றும் தனது சமீபத்திய பேட்டியில் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். மாஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அதிகமான அளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டை ரசிகர்கள் அதிகமாக கொண்டாட இந்தப் படமும் காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.