உலாமாக்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6-9 வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை: தமிழக அரசு

சென்னை: உலாமாக்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6-9 வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ்‌.மஸ்தான்‌அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.13) பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர் ‌மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடு வாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ செஞ்சி கே.எஸ்‌.மஸ்தான் தன் துறையின் கீழ் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:

  • ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையினருக்கு 2500 விலையில்லா மின்மோட்டாருடன்‌ கூடிய தையல்‌ இயந்திரங்கள்‌ 1கோடியே 60 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ வழங்கப்படும்‌.
  • உலமாக்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ நல வாரியத்தில்‌ பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்‌ தொகை ரூ. 20,000-லிருந்து ரூ. 30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்‌.
  • சிறுபான்மையினர்‌ நலத்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ உலமாக்கள்‌ மற்றும்‌ இதர பணியாளர்கள்‌ நல வாரிய உறுப்பினர்களின்‌
  • 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ மாணவியருக்கு 1000 ரூபாய்‌ கல்வி உதவித்தொகை
  • வழங்கப்படும்‌.
  • உலமாக்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ நல வாரியத்தில்‌ பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரணத்திற்கான உதவித்தொகை ரூ.1,00,000,-லிருந்து ரூ.125,000,- ஆக உயர்த்தி வழங்கப்படும்‌
  • சிறுபான்மையின மாணவர்களின்‌ நலன்‌ கருதி, சென்னை மற்றும்‌ கோயம்புத்தூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ 2 புதிய சிறுபான்மையினர்‌ கல்லூரி மாணவர்‌ விடுதிகள்‌ 81 லட்சத்து 68 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவில்‌ துவங்கப்படும்‌.
  • கபர்ஸ்தான்‌ மற்றும்‌ அடக்கஸ்தலங்களுக்கு 1 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிதாக சுற்றுச்சுவர்‌ அமைக்கப்படும்‌ மற்றும்‌ புனரமைக்கப்படும்‌.
  • சொந்தக்‌ கட்டடத்தில்‌ இயங்கும்‌ சிறுபான்மையினர்‌ விடுதிகளுக்கு சிறப்புப்‌ பராமரிப்பு மற்றும்‌ பழுது பார்ப்புப்‌
  • பணிகள்‌ மேற்கொள்ள 1 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌.
  • சென்னை இராயப்பேட்டையில்‌ சிறுபான்மையினர்‌ கல்லூரி மாணவியர்‌ விடுதிக்கு 6 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவில்‌ சொந்தக்‌ கட்டடம்‌ கட்டப்படும்‌.
  • கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ கூடுதலாக தலா ஒரு முஸ்லீம்‌ மகளிர்‌ உதவி சங்கம்‌ 2 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ புதிதாக துவங்கப்படும்‌.
  • கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்‌ போட்டிகள்‌, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்‌ ஆணையம்‌ மூலம்‌ 1 கோடி ரூபாய்‌ செலவில்‌ நடத்தப்படும்‌.
  • தமிழ்நாடு வக்‌ஃப்‌ வாரியத்திற்கு வக்‌ஃப்‌. சொத்துக்களை அளவை செய்வதற்காகவும்‌ மார.) 11 மண்டல அலுவலகங்களில்‌ 11 கணினிகள்‌ மற்றும்‌ 11 ஸ்கேனர்களுடன்‌ கூடிய நகல்‌ எடுக்கும்‌ இயந்திரங்கள்‌ வாங்குவதற்கு 2 கோடி ரூபாய்‌ வழங்கப்படும்‌.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.