மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் (Central Coalfields Limited – CCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 330 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
பதவி பெயர்: மைனிங் சர்தார், எலக்ட்ரீசியன், துணை சர்வேயர், உதவி போர்மேன் (மின்சாரம்)
காலிப்பணியிடங்கள்: 330 (மைனிங் சர்தார் – 77, எலக்ட்ரீஷியன்/ டெக்னீஷியன் – 126, துணை சர்வேயர் -20, உதவி போர்மேன் – 107)
கல்வித்தகுதி:
மைனிங் சர்தார் – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 3 வருட கால சுரங்கப் பொறியியலில் டிப்ளமோ மற்றும் ஓவர்மேன் தகுதிச் சான்றிதழ்/எரிவாயு சோதனைச் சான்றிதழ்/முதல் உதவிச் சான்றிதழ்.
எலக்ட்ரீஷியன்/ டெக்னீஷியன் – ஐடிஐ (எலக்ட்ரீசியன்)
துணை சர்வேயர் – 12 மற்றும் மைன்ஸ் சர்வே சான்றிதழ்
உதவி போர்மேன் – எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ மற்றும் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர்ஷிப் சான்றிதழ்.
வயது வரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 – 35, மற்ற வகுப்பினருக்கு 18 – 33.
சம்பளம்: மாதம் ரூ. 31,852 (மைனிங் சர்தார், துணை சர்வேயர், உதவி போர்மேன்), எலக்ட்ரீஷியன் – ரூ. 1,087 (ஒரு நாள்)
தேர்வு செய்யப்படும் முறை: கணினி தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 200. எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டின் https://www.centralcoalfields.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.04.2023
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசிநாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.