முதல்வர் மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு தெரியுமா? கூடவே கடன் தொகை, நிலுவை வழக்குகள் விவரம்!

ADR (Association for Democratic Reforms) எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அனைத்து மாநில முதல்வர்களின் கடந்த தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 28 மாநிலங்கள், டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 30 முதல்வர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல்வர்கள் பட்டியல்

இந்த பட்டியலில் 510 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து 163 கோடி ரூபாய் சொத்துகள் உடன் அருணாசலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு 2வது இடத்தில் இருக்கிறார். 63 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 3வது இடத்தில் உள்ளார். கடைசி இடத்தில் 15 லட்ச ரூபாய் சொத்து மதிப்புடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருக்கிறார்.

ஸ்டாலினுக்கு 14வது இடம்

அதற்கு முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் 1.18 கோடி ரூபாய் சொத்துகள் உடன் உள்ளார். இதையடுத்து 1.27 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஹரியானா முதல்வர் மனோகர் லால் இருக்கிறார். இந்த பட்டியலில் தமிழக முதல்வர்

14வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு 8.88 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருக்கின்றன. கடன் தொகை எதுவும் இல்லை. சுய வருவாய் 28.78 லட்ச ரூபாய்.

எத்தனை வழக்குகள்

ஸ்டாலின் மீது 47 வழக்குகள் இருக்கின்றன. அதில் 10 வழக்குகள் ஐ.பி.சியின் மிகவும் சீரியஸான பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகும். ஸ்டாலின் மீது பதிவு செய்யபப்ட்ட வழக்குகளை எடுத்துக் கொண்டால், தேர்தலின் போது தவறான வார்த்தைகளை பயன்படுத்தியது, இரண்டு பிரிவினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது,

காவல் நிலைய விவரம்

சட்டமன்றத்தில் சட்டவிரோதமாக நடந்து கொண்டது, அவதூறு வழக்கு, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்டவை அடங்கும். இந்த வழக்குகள் சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திருவாரூர், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய காவல் நிலையங்களிலும் பதிவாகியுள்ளன.

கடன் தொகை

ADR வெளியிட்டுள்ள முதல்வர்களின் பட்டியலில் அதிக கடன் வைத்திருப்பவர்களின் பட்டியலில் 8.88 கோடி ரூபாய் உடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து 4.99 கோடி ரூபாயுடன் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை 2வது இடத்திலும்,

கல்வித்தகுதி

3.74 கோடி ரூபாய் மதிப்பில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 3வது இடத்திலும் இருக்கின்றனர். முதல்வர்களின் கல்வித்தகுதி வாரியாக பார்க்கும் போது, 10வது தேர்ச்சி பெற்றவர் ஒருவர், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் 3 பேர், பட்டதாரிகள் 11 பேர், தொழிற்படிப்பு படித்தவர்கள் 4 பேர், முதுகலை பட்டம் பெற்றவர்கள் 9 பேர், டாக்டரேட் முடித்தவர் ஒருவர், டிப்ளமோ முடித்தவர் ஒருவர் அடங்குவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.