துபாய் : கத்தார் – பஹ்ரைன் இடையிலான தூதரக உறவை புதுப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான கத்தார் பயங்கரவாதத்துக்குஆதரவு தருவதாகக் கூறி,அந்நாட்டுடனான உறவை, அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை 2011ல் துண்டித்தன. இதையடுத்து, கத்தார் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை சந்தித்தது. இருப்பினும், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் உதவியால், பொருளாதாரத்தை மீட்டெடுத்த கத்தார், இன்று உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளையும் கைவிட்டது.
இதையடுத்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகள், 2021ல் கத்தாருடன் மீண்டும் துாதரக உறவை ஏற்படுத்தின. பஹ்ரைன் மற்றும் கத்தார் இடையிலான உறவை புதுப்பிப்பது தொடர்பான பேச்சும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இரு நாடுகளின் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், கத்தார் – பஹ்ரைன்இடையிலான உறவு குறித்தபேச்சு நடந்தது. இரு நாடுகளும் ஒப்புதல் அளித்ததைஅடுத்து, துாதரக உறவை ஏற்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Advertisement