நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பெறப்படும் என்று முன்னதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. கால அவகாசத்தை நீட்டிக்கமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், சில மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

2023 நீட் தேர்வுக்கு, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பழைய விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நினைப்பவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை, 2023 ஏப்ரல் 15ம் தேதி வரை https://neet.nta.nic.in/,என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். இந்தத் தேதிக்குப்பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.