800 ரூபாய்க்கு விற்ற டிக்கெட்கள் 1,500 ரூபாய்க்கு மேல போயிடுச்சு. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்து பயணம் என்பது பயணிகளை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் பாதியை தாண்டி விட்டாலே கோடை விடுமுறை தொடங்கி விடும். இதனால் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வர். அதில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை தான் பெரிதும் அதிகம்.
மூன்று நாட்கள் விடுமுறைஇந்த சூழலில் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14 – வெள்ளி), சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்து கடும் வெயிலுக்கு மத்தியில் சற்றே ஆறுதல் அளித்துள்ளது. இதனால் வெளியூர் பயணங்களுக்கு பலரும் திட்டமிட்டுள்ளனர். நேற்று இரவு முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
ஆம்னி பேருந்து கட்டணம்விடுமுறை காலத்தை ஒட்டி தமிழக அரசு சார்பில் பல்வேறு போக்குவரத்து கழகங்களில் இருந்து கூடுதலாக 1,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தில் மாற்றம் வந்ததாக தெரியவில்லை. சென்னையில் இருந்து எங்கு சென்றாலும் குறைந்தது 1,500 ரூபாய் கட்டணம் தானாம். வழக்கத்தை விட 50 முதல் 80 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் எங்கே?கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு பலமுறை எச்சரித்து விட்டது. ஆனால் அது முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்றால் இல்லை. நேற்றைய தினம் கோயம்பேடு மற்றும் தாம்பரத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பற்றி ஆய்வு செய்ய போக்குவரத்து அதிகாரிகள் யாரும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறப்பு பேருந்துகளில் சர்ச்சைஇதுதொடர்பாக பேசிய சமூக ஆர்வலர் ஆர்.ரெங்காசாரி, ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், அரசு தான் கூடுதலாக பேருந்துகளை இயக்குகிறதே எனப் பதில் கூறுகின்றனர். இந்த சூழலில் சிறப்பு பேருந்துகளில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. வழியில் வரும் நிறுத்தங்களில் இறங்கும் பயணிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
சென்னை டூ மதுரைகடைசி நிறுத்தம் வரை செல்லும் பயணிகளை மட்டுமே ஆம்னி பேருந்துகள் ஏற்றிக் கொள்கின்றன. உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏசி பேருந்துகள் நிறைய இருக்கின்றன. இதில் மதுரை செல்லும் பேருந்தில் ஏறினால் முழுக் கட்டணத்தை வாங்கி கொள்கின்றனர். வழியில் திருச்சியில் இறங்க வேண்டுமென்றால் ஏற்ற மறுக்கின்றனர்.
பயணிகள் அவதிஇவர்களுக்கு வழக்கமான பேருந்துகளில் இடம் கிடைப்பதில்லை. அப்படியெனில் என்ன தான் செய்வார்கள். இதனால் பலரும் அவதிக்கு ஆளாவதாக ஆர்.ரெங்காசாரி தெரிவித்தார். இதுதவிர சென்னையில் இருந்து வெளியேறும் வரை கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டியுள்ளது. அதுவும் பெருங்களத்தூர் அருகே சென்றுவிட்டால் அவ்வளவு தான்.
போக்குவரத்து நெரிசல்ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடக்க அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறதாம். அதேசமயம் போக்குவரத்தை சரிசெய்ய போதிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக போலீசார் பதில் அளித்துள்ளனர்.