கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படாததால் பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறுவதால், அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குழப்பதில் உள்ளார்.
மே 10ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அங்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே பாஜக சார்பில் இரண்டு கட்டமாக 212 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் பலர் புதுமுக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் பாஜக மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, சீட் வழங்கவில்லை எனக்கூறி பாஜக மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிரடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 7 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவர்களில் 2 பேர் அடிப்படை உறுப்பினர் இருந்தே ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பலரும் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால், கர்நாடகா பாஜக ஆட்டம் கண்டுள்ளது.
newstm.in