கடந்த மாதம் தென்காசியில் பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது, தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என்றும, இதனை வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும அவரது குடும்பத்தினர் என மொத்தம் 17 திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை முதற்கட்டமாக இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 17 பேரின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிடும் திமுக பிரமுகர்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் கமலாலயத்தில் அகன்ற திரையில் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் என சில தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெகத்ரட்சகன் – ரூ.50 ஆயிரத்து 219.37 கோடி
எ.வ.வேலு – ரூ.5,442.39 கோடி
கே.என்.நேரு – ரூ.2,495.14 கோடி
கனிமொழி- ரூ.830.33 கோடி
கலாநிதிமாறன் – ரூ.12,450 கோடி
டிஆர் பாலு – ரூ.10,841.10 கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் – ரூ.579.58 கோடி
கலாநிதி வீராசாமி – ரூ.2,923.29 கோடி
பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி – ரூ.581.20 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி
உதயநிதி – ரூ.2,039 கோடி
சபரீசன் – ரூ.902.46
ஜி ஸ்கொயர் வருமானம் – ரூ.38,827.70 கோடி
மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி)