தஞ்சாவூர்: திமுகவின் ஊழல் லிஸ்ட்டை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவாதங்களும், சலசலப்புகளும் எழுந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாநாட்டை தவிர, அடுத்தடுத்த மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த மாநாட்டை அவர் கூட்டவில்லையாம்.
மாறாக, தனக்கான செல்வாக்கு என்ன என்பதை மேலிடத்துக்கு காட்டினால்தான், கூட்டணி, சீட் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய முடியும் என்பதையும் ஓபிஎஸ் நன்றாகவே உணர்ந்துள்ளாராம்..
கேசி பழனிசாமி: இப்போதைக்கு திருச்சி மாநாட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதிலேயே முழு கவனத்தை திருப்பி வருவதாக தெரிகிறது.. பிரிந்து போனவர்களுக்கும் ஓபிஎஸ் அழைக்க நினைக்கிறாராம்.. குறிப்பாக, மூத்த தலைவர்கள் கேசி பழனிசாமி, அன்வர்ராஜா, சசிகலா, உள்ளிட்டோரை அழைக்கும் விதமாகவும் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகிறாராம்.. ஆனால், சசிகலா இதில் நேரடியாக கலந்து கொள்வது சந்தேகம்தானாம்.. ஓபிஎஸ்ஸுடன் சேருவதாக இருந்தால் எப்போதோ அவருடனான சந்திப்பை சசிகலா நடத்தியிருக்கக்கூடும்..
சாதி முத்திரை: ஓபிஎஸ் ஏப்போதுமே தன் தரப்பு ஆதரவாளர்தான் என்பதை சசிகலா அறியாமல் இல்லை.. எனவே, எடப்பாடியை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்பதில்தான் திணறி வருவதால், ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா பங்கேற்க சாத்தியமில்லை என்கிறார்கள். அதுபோலவே ஓபிஎஸ் மாநாட்டில் தினகரனும் பங்கேற்க மாட்டார் என்கிறார்கள். காரணம், ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டால், “சாதி முத்திரை” குத்தப்பட்டுவிடும் என்பதால், அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறாராம்.. ஆக, ஓபிஎஸ் இந்த மாநாட்டை எப்படி நடத்தி முடிக்க போகிறார்? என்பது மிகப்பெரிய ஆர்வத்தை கிளப்பி உள்ளது.
ஆனால், ஓபிஎஸ் மாநாடு பற்றி டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன் என்று கூலாக ஒரு பதில் சொல்லி உள்ளார்.. தஞ்சையில் இன்று சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்… பிறகு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்று திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை சொல்லி உள்ளார்..
ஊழல் லிஸ்ட்: அந்த ஊழல் பட்டியல் வெளியான பிறகு அது எந்த அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தும்? அந்த ஊழல் உண்மையா? இல்லையா ? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.. அதிமுக நிர்வாகிகளின் ஊழல் லிஸ்ட்டை ஏன் வெளியிடவில்லை என தெரியவில்லை.. நீங்கள் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்த வருட இறுதியில் எங்களது நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்… அடுத்த தமிழ் புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதாக அமையும்… திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்துவது குறித்து மீடியாக்கள் வாயிலாகதான் தெரிந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.