நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி : அபிராமி..!!

சென்னையில் அடையாறு பகுதியில் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதில் நடவடிக்கை இல்லாத தால் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் ஹரிபத்மனுக்கு ஆதரவாக அபிராமி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஹரிபத்மன் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் மீது பொய் புகார் கூறியதாக தெரிவித்து வருகிறார் நடிகர் அபிராமி. இதனால் அபிராமிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அபிராமி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்லூரியில் படித்த போது இது போன்று நடந்த நடக்கவில்லை. இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது என்று பேசியிருந்தார். ஹரிபத்மன் மிகவும் நல்லவர் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னாள் நடிகையான குட்டி பத்மினி கலாக்ஷேத்ரா விவகாரம் பற்றியும் அபிராமி பற்றியும் பேசி இருக்கிறார். அதுதான் தற்போது புயலை கிளப்பி உள்ளது. உங்களைப் போன்றோர் சினிமாவில் இருக்கிறீர்கள். அதனால் பிறர் தொடும்போது உங்களுக்கு அந்த ஃபீல் இருக்காது. ஆனால் அங்கு போராடிய பெண்களுக்கு அப்படி இல்லை. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் அவர்கள். அவங்க மனவேதனையை இப்படி சாதாரணமா சொல்லிட்டீங்க, எனக்கு பத்திக்கிட்டு வருது நீங்க பேசுனது என்று கூறியிருந்தார்.

இதற்கு கடுப்பான அபிராமி அவருக்கு தர லோக்கலாக பதிலடி கொடுத்துள்ளார். அவர், “சினிமா துறையில் இருக்க எல்லா பெண்களும் உங்கள மாதிரி கிடையாது குட்டி பத்மினி ஆன்ட்டி. உங்களுக்கு எந்த ஃபீலும் இல்லாதது வருத்தம் தான். உங்களுக்கே பத்திகிட்டு வருதுனா நல்ல குடும்பத்தில் பிறந்த எங்களுக்கு எவ்வளவு எரியும் ஆன்ட்டி. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம். வயசான காலத்துல உங்க ஹெல்த்த பாத்துக்கோங்க என்று சொல்லி அபிராமி மிகவும் காட்டமாக குட்டி பத்மினிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதோடு வயதான காலத்தில் உங்களுக்கு இது தேவையா எனவும் மோசமாக கேட்டுள்ளார்.

நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் இப்படி செய்யலாமா என பேசியதற்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.