Rudhran Day 1 collection : ருத்ரனாக லாரன்ஸ் ஜெயித்தாரா.. ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல்!

சென்னை : ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்கில் நேற்று வெளியானத் திரைப்படம் ருத்ரன்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் : டான்ஸ் மாஸ்டர், நடிகர்,இயக்குநர் என பன்முகத்திறமைக்கு சொந்தக்காரரான ராகவா லாரன்ஸின் நடிப்பில் கடைசி கடந்த 2019ம் ஆண்டு காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்துத்துத்தான் ருத்ரன் திரைப்படம் நேற்று வெளியானது. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டாபைவ் போன்ற படங்களை தயாரித்த ஸ்டார் கதிரேசன் இப்படத்தை இயக்குநராகி உள்ளார்.

ருத்ரன் : பூர்ணிமா பாக்யராஜ், நாசரின் செல்லமகனாக லாரன்ஸ் வழக்கம் போல நடித்திருக்கிறார். நாசர் தனது நண்பனுக்கு 7 கோடி கடன் வாங்கி வருகிறார். ஒரு கட்டத்தில் நண்பன் ஏமாற்றிவிட மனவேதனையில் நாசர் உயிரிழந்துவிடுகிறார். இதனால் குடும்ப பொறுப்பு, அப்பா வாங்கிய கடனை அடைக்க வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்.

பழைய கதை : இந்த நேரத்தில் வில்லன் பூமி (சரத்குமார்) கையில் சிக்கி பூர்ணிமா உயிரிழந்து விடுகிறார். மனைவி பிரியா பவானி சங்கர் காணாமல் போய்விட அவரை தேடி அலைகிறார் ருத்ரன். குடும்பத்தின் இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை தெரிந்து வில்லனை பழிவாங்கும் கதை தான் ருத்ரன். இந்த கதை ஏற்கனவே பல தமிழ்படங்களில் பார்த்து பார்த்து அலுத்துப்போன கதை தான். கதையில் புதுசு என்று பார்த்தால் எதுவுமே இல்லை.

மனதில் நிற்கவில்லை : ஜிவி பிரகாஷின் இசையும் சுமார் என்று சொல்லும் அளவுக்குத்தான் உள்ளது. அஃப்ரோ இசையில் வரும் ‘ஜொர்தாலயா’ பாடல் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம்போடவைத்துள்ளது. காதல்,ரொமான்ஸ், அப்பா செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட் என பலவற்றை முயற்சி செய்துள்ளார் லாரன்ஸ் ஆனால் அவை எதுவுமே மனதில் நிற்கவில்லை.

முதல் நாள் வசூல் : ருத்ரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியான ருத்ரன் திரைப்படம் முதல் நாளில் 3 கோடி வசூலித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.