சுவையான 'பச்சை ரத்தம் ரெசிபி'… பெண்ணின் மூளையில் கூடு கட்டிய புழுக்கள்..!

வியட்நாமின் ஹனோயினை சேர்ந்த 58 வயதான பெண் பச்சை ரத்தத்துடன் கறியை சேர்த்து சாப்பிட்டுள்ளார். இதனால் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்ததில் அந்த பெண்ணின் மூளையில் ஒட்டுண்ணிகளும், புழுக்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
மேலும், பெண்ணின் கை, கால்களின் தோல்களுக்குள் புழுக்கள் நெளிந்து செல்வதும் தெரிந்தது. மருத்துவர் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் வியட்நாமின் பாரம்பரிய சுவைமிக்க உணவான ‘டைட் கேன்’ சாப்பிட்டுள்ளார். அந்த உண்வு வாத்து மற்றும் பன்றி இறைச்சியில் தயாரிக்கப்படுவதுடன் அவற்றின் பச்சை ரத்தத்துடன் பரிமாறப்படும். இந்த உணவை சாப்பிட்ட பிறகு அந்த பெண்ணுக்கு கடுமையான தலைவலியால் அவதி பட்டு வீட்டில் பலமுறை மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் நிலைமை மோசமான பிறகே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் செய்ததில், ஒட்டுண்ணி புழுக்கள் பெண்ணின் கைகளிலும், கால்களிலும் தோலின் கீழ் திரண்டிருப்பது கண்டறியப்பட்டது மேலும், சில புழுக்கள் அவரது மூளைக்குள் கூடு கட்டியும் இருந்துள்ளது.

பின்னர் நல்லபடியாக அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது மருத்துவர்கள் பரிந்துரைப்படி வீட்டில் இருந்தே மருந்துகளை எடுத்துக்கொண்டு வரும் அந்த பெண்ணிடம் உள்ளூர் செய்தியாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர்.

அதில் அவர் கூறியுள்ளதாவது; மாதத்திற்கு ஒருமுறை இந்த ரத்த கொழுக்கட்டையை (டைட் கேன்) சாப்பிடுவேன். ஆனால், கடந்த முறை ஹோட்டலில் வாங்காமல், நானே தயார் செய்து சாப்பிட்டேன். நானே சமைத்தால் சுத்தமாக இருக்கும் என்று நினைத்தேன் என அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வியட்நாம் மருத்துவர் கூறுகையில், இதுபோன்ற பல கேஸ்கள் பதிவாகியுள்ளன. சில பேருக்கு பக்கவாதம், மனநல பிரச்சினை, கண் பார்வைகூட குறைந்துவிடும். இவர்களில் பலர் பல ஆண்டுகளாக மனநல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள் என அவர் கூறினார்.

பாரம்பரிய உணவாக இருந்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றால் அதை ஏன் சாப்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.