கர்த்தூம்: சூடானில் துப்பாக்கிச்சூடு, கலவரங்கள் நடந்து வருவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடான் தலைநகர் கார்ட்டூமில் சூடான் ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் கடும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. சக்தி வாய்ந்த துணை ராணுவக் குழுவான ஆர்எஸ்எப்- பின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும் அவை சட்டவிரோதமானவை என்றும் ராணுவம் கூறியிருந்தது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் சூடானில் உள்ள இந்திய தூதரகம், ‛ சூடானில் வசிக்கும் இந்தியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் தொடர்வதால், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். இந்தியர்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்ப இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.
Advertisement