1 மணி நேரத்தில் 3 ஆயிரம் தண்டால்; உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியர்

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் லூகாஸ் ஹெல்ம்கே (வயது 33). இவர் 1 மணி நேரத்தில் 3,206 தண்டால்களை எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்து உள்ளார். இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது.

இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் மற்றொரு ஆஸ்திரேலியரான டேனியல் ஸ்காலி என்பவர் அதிக தண்டால் எடுத்து சாதனை புரிந்து உள்ளார்.

இதனை லூகாஸ் முறியடித்து இருக்கிறார். தனது ஒரு வயது மகனுக்கு ஊக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சாதனை முயற்சியில் அவர் ஈடுபட்டு உள்ளார். இதனை கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளது.

இதற்காக 2 முதல் 3 ஆண்டுகள் வரை அவர் பயிற்சி எடுத்து வந்து உள்ளார். பிரிஸ்பேனில் தனக்கென பளுதூக்கும் ஜிம் ஒன்றையும் வைத்திருக்கும் லூகாஸ், இந்த சாதனை முயற்சியையும் அந்த உடற்பயிற்சி கூடத்திலேயே நடத்தி காட்டியிருக்கிறார்.

இதனுடன் தனது சாதனையை முடித்து கொள்ள அவர் விரும்பவில்லை. அதனால், இனி ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு சாதனையையாவது முறியடிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டு உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.