ஹைதராபாத்தில் நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலை.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி ஹைதராபாத்தில் ஹுசைன் சாகர் ஏரியில் அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கலச் சிலையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார்.

இந்த சிலை ரூ.145 கோடி செலவில் 360 டன்களுக்கும் அதிகமான எஃகு மற்றும் 100 டன் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதான் நாட்டிலேயே மிக உயரமான அம்பேத்கரின் சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. நேற்று இந்த சிலையை திறந்து வைக்க அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு புத்த துறவிகளின் கீர்த்தனைகளுக்கு மத்தியில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

மேலும், இந்த விழாவிற்கு 119 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் தலித் மக்கள் அழைக்கப்பட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இச்சிறப்பு வாய்ந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது;

தெலங்கானாவில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 அடி வெண்கல சிலையை திறந்து வைத்ததற்காக தெலங்கானா முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரது 125 அடி வெண்கல சிலையை திறந்து வைத்த

தெலங்கானா முதலமைச்சருக்குப் பாராட்டுகள். புத்தர் சிலைக்கும் தெலங்கானா தலைமைச் செயலகக்

கட்டடத்துக்கும் இடையே சமத்துவத்தின் மாபெரும் அடையாளமாக அம்பேத்கரின் சிலையை நிறுவிட வேண்டும் என்ற எண்ணம் சாலப் பொருத்தமானது, பிரமிப்பை ஏற்படுத்துகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.