சென்னை :நடிகர் விக்ரம் -இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் படம் தங்கலான். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை கூறும் பீரியட் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் கேஜிஎப்பிலும் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட்டது.
விக்ரமின் தங்கலான் படம் : நடிகர் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வருகிறது தங்கலான் படம். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பீரியட் படமாக உருவாகி வருகிறது தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம் பீரியட் படத்திற்கேயுரிய கெட்டப்புடன் நீண்ட தலைமுடி, தாடியுடன் மிரட்டலான தோற்றத்துடன் நடித்து வருகிறார். படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
நடிகர் விக்ரமின் பிறந்தநாளையொட்டி நாளை மறுதினம் தங்கலான் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையொட்டி, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கேஜிஎப்பில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். சென்னையில் இந்தப் படத்தின் எஞ்சிய சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடைய படங்களின் திரைக்கதை மற்றும் கதையை வித்தியாசமான வகையில் திட்டமிடுவது பா ரஞ்சித்தின் வழக்கம். தன்னுடைய இத்தகைய முயற்சிகள் மூலம் சர்வதேச அளவில் தன்னை தனித்தன்மையுடன் நிலைநிறுத்தியுள்ள இயக்குநர்களில் முன்னணியில் அவர் காணப்படுகிறார். இந்நிலையில், தன்னுடைய கேரக்டர்களுக்காக மெனக்கெடும் விக்ரம் மற்றும் ரஞ்சித் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்காக விக்ரம் 34 கிலோ வரை எடையை குறைத்துள்ளதாகவும் பா ரஞ்சித் முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
தங்கலான் படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில், அடுத்ததாக சார்பட்டா பரம்பரை 2 படத்தின் அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. இதுவும் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் 18ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் துவக்கத்தை கதைக்களமாக கொண்டுள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். சர்வதேச தரத்திலான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் கண்டிப்பாக ஆஸ்கருக்கு செல்லும் என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதை பெற்றுள்ள நிலையில், தங்கலான் படம் கண்டிப்பாக ஆஸ்கருக்கு செல்லும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.