யார் இந்த நந்தினி குப்தா? நிகழ்ச்சி தொகுப்பாளர் டூ மிஸ் இந்தியா 2023… முழு பின்னணி!

இந்தியாவின் மிகப்பெரிய அழகிப் போட்டியாக கருதப்படும் ’பெமினா மிஸ் இந்தியா 2023’ நிகழ்வின் இறுதிச் சுற்று நேற்றைய தினம் (ஏப்ரல் 15) மணிப்பூர் மாநிலம் இம்பாலில் குமன் லம்பாக் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 59வது ஆண்டாக நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

மிஸ் இந்தியா நந்தினி குப்தா

இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தா மிஸ் இந்தியாவாக பட்டம் வென்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது இடத்தை டெல்லியை சேர்ந்த ஷ்ரேயா பூஞ்சா, மூன்றாவது இடத்தை மணிப்பூரை சேர்ந்த தவுனோஜம் ஸ்டெரலா பிடித்தார். இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

UEA மிஸ் ஓல்டு விழா

மேலும் முன்னாள் வெற்றியாளர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பும் அரங்கேறியது. நந்தினி குப்தா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் 71வது மிஸ் ஓல்டு போட்டியில் இந்தியாவில் சார்பில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது. நந்தினி குப்தாவிற்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

View this post on InstagramA post shared by Femina Miss India (@missindiaorg)

பிஸினஸ் மேனேஜ்மென்ட்

இந்த ஆர்வம் பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர உறுதுணையாக இருந்துள்ளார். இருப்பினும் சில நிராகரிப்புகள் இவரை பெரிதும் பாதித்துள்ளன. இளம் வயதிலேயே பல சவால்களை தாண்டி வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதனை ஒரு நல்ல அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

View this post on InstagramA post shared by Femina Miss India (@missindiaorg)

ரத்தன் டாடா பிடிக்கும்

நந்தினி குப்தாவின் இலக்கு என்பது ஏதேனும் ஒரு தொழில் தொடங்கி ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவது தான். பலரது கனவுகளை நிறைவேற்றுவதில் ஒரு உந்துதலாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இவருக்கு பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா முன்னுதாரணமாக விளங்குகிறார். அவரது மனித நேயப் பணிகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யும் சேவை ஆகியவை பெரிதும் ஈர்த்ததாக தெரிவித்துள்ளார்.

ரோல் மாடல் பிரியங்கா சோப்ரா

இதுதவிர மிஸ் ஓல்டு 2000 பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவை பெரிதும் பிடிக்குமாம். இளம் வயதிலேயே சர்வதேச அளவில் பட்டம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். இதையடுத்து சமூகப் பணிகளிலும், நடிகையாகவும் ஜொலித்து கொண்டிருக்கிறார். பலருக்கு உந்துதலாக உள்ளார். சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாக நந்தினி குப்தா கூறியுள்ளார்.

கோடா டோரியாவிற்கு அங்கீகாரம்

மேலும் கோடா டோரியா என்ற துணி ரகத்தை பெரிதும் விரும்பக்கூடியவராக நந்தினி குப்தா இருக்கிறார். இதன் பின்னால் கடின உழைப்பை செலுத்தி கொண்டிருக்கும் பெண்களுக்கு போதிய அங்கீகாரமும், பொருளாதார மேம்பாடும் கிடைக்கவில்லை. அதை மாற்றி சரியான வழித்தடம் அமைத்து தர விரும்புகிறார். இதன்மூலம் இந்திய கைத்தறியின் படைப்புகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெறச் செயய் வேண்டும் என்ற ஆர்வத்துடன் காணப்படுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.