வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
விஜயவாடா: ஆந்திராவில் முன்னாள் எம்.பி., விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் ஓய்எஸ் பாஸ்கர் ரெட்டியை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஓய்எஸ் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்த ரெட்டி. கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் 15 இரவில், புலிவெந்துலாவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். பிறகு, 2020ல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
2021 அக்.,26லும், 2022 ஜன.,31லும் சி.பி.ஐ., இரண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த கொலை வழக்கில், பாஸ்கர் ரெட்டிக்கு தொடர்பு உள்ளதாக கூறி, கடப்பா மாவட்டத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement