3 வயது சிறுமியை 5 வயதே ஆகும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்த வந்த 3 வயது சிறுமிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன் சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளான்.
இந்நிலையில் சிறுமியை பள்ளியின் மேல் பகுதிக்கு அழைத்து சென்று அச்சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசிடம் புகார் அளித்தனர். அவர்கள் சிறுவனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு மொபைல் போன் தான் காரணம் என்று கூறப்படுகிறது. எல்லாம் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் மொபைல் போன் விளங்குவதால், இளைய சமூகத்தினர் தவறான பாதை நோக்கி செல்கின்றனர்.
newstm.in