இசைத்துறையில் புரிந்த சாதனைக்கான பிரபல பின்னணி பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பாடகர் மனோ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவர் நடிகராகவும் அறியப்படுபவர். சிங்கார வேலன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் படங்கள் தெலுங்கில் வெளியாகும் போதெல்லாம் மனோ அவருக்காக தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார். அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு எஸ்பிபி தெலுங்கில் டப்பிங் பேச, சதிலீலாவதி மற்றும் பம்மல் கே சம்மந்தம் படங்களில் மட்டும் மனோ டப்பிங் பேசியிருப்பார்.
இந்த நிலையில் மனோ தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு ரிச்மண்ட் கேப்ரியல் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். என்னை நேசித்தவர்களுக்கு அன்பும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in