வாஷிங்டன்: நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வளர்ந்த நாடுகளை விட அதிகமாக உள்ளதாக பன்னாட்டு நிதியம்(ஐஎம்எப்) கணித்து உள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.9 சதவீதமாக இருக்கும் எனக்கூறியுள்ள ஐ.எம்.எப்., உலகின் வேகமாக வளரும் நாடாக இன்னும் இந்தியா உள்ளதாக அறிவித்துள்ளது.
2023ல் இந்தியாவின் ஜிடிபி 5.9 என கணித்துள்ள ஐ.எம்.எப்., மற்ற நாடுகளின் ஜிடிபி வளர்ச்சியையும் கணித்து உள்ளது.
இதன்படி சீனா : 5.2
இந்தோனேஷியா : 5.0
சவுதி அரேபியா : 3.1
மெக்சிகோ: 1.8
ஆஸ்திரேலியா:1.6
அமெரிக்கா :1.6
கொரியா:1.5
கனடா :1.5
ஸ்பெயின்:1.5
ஜப்பான் :1.3
நியூசிலாந்து:1.1
பிரேசில்:0.9
சுவிட்சர்லாந்து: 0.8
ரஷ்யா:0.7
இத்தாலி:0.7
பிரான்ஸ்: 0.7
தென் ஆப்ரிக்கா:0.1
ஜெர்மனி: மைனஸ் 0.1
பிரிட்டன்: மைனஸ் 0.3 ஆக இருக்கும் என கணித்து உள்ளது.
அதேநேரத்தில் அடுத்த நிதியாண்டுக்கான, அதாவது 2024-25 நிதியாண்டுக்கான வளர்ச்சிக் கணிப்பையும், 6.8 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக குறைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.