துபாய்: துபாய் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கேராலாவின் மல்லப்புரம் பகுதியை சேர்ந்த ரிஜேஸ் மற்றும் அவரது மனைவி ஜிஷி ஆகியோர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இவர்கள் மட்டுமின்றி சூடான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.