தமிழகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை… 1 முதல் 3ஆம் வகுப்பு வரை… விரைவில் ஹேப்பி நியூஸ்!

தமிழகத்தில் கோடை விடுமுறை நெருங்கி விட்டது. ஏற்கனவே 12ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக 11, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை மாவட்ட ரீதியில் முழு ஆண்டு தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோடை வெப்பம் அதிகரிப்பு

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரைவாக பள்ளி வேலை நாட்களை நிறைவு செய்து விடுமுறை விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி வரும் 28ஆம் தேதி நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கேற்ப கால அட்டவணை தயாரித்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு

இந்நிலையில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். அதன்பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் ஏப்ரல் 22ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகப் பள்ளிகள் திறப்பு

மீண்டும் ஜூன் 1 அல்லது 5ஆம் தேதி அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டதாக கூறப்படும் அறிவிப்பில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 21 வரை மூன்றாம் பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

முழு ஆண்டுத் தேர்வு

இதையடுத்து 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தங்கள் மாவட்டங்களின் உள்ளூர் நிலைக்கு ஏற்ப ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகளை நடத்தி கொள்ள வேண்டும். இதேபோல் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப வரும் 28ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்த வேண்டும். அதன்பிறகு கோடை விடுமுறை விட வேண்டியது அவசியம்.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

இம்மாத இறுதியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஆசிரியர்கள், மாணவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருகை, கற்றல் நிலை, உடல்நிலை, மனநிலை, கல்வி இணை செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள் உள்ளிட்டவை அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் பற்றிய தகவலையும் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதற்கிடையில் தனியார் பள்ளிகளை போல மாணவர்கள் சேர்க்கைக்கு அரசு பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்படும். இதற்காக விழிப்புணர்வு பேரணி நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.