கவர்னர் ஆர்.என்.ரவி நாளை முதல் 2 நாள் சுற்றுப்பயணம்..!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

இதற்காக அவர் 18-ம் தேதி காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் சென்றடையும் அவர் ராமேசுவரம் கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்கள்-ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். அன்று மாலை தேவிப்பட்டினத்தில் மீனவர்களை சந்தித்து உரையாடுகிறார்.

எட்டிவயல் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார். வரும் 19-ம் தேதி (புதன்கிழமை) உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். மாலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கும், பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

அதன் பிறகு மதுரை வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் வருகையை யொட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.