உடனே கிளம்புங்க..!! ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை… இன்று முதல் 4 நாட்கள் நேர்கானல்..!!

சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இன்று முதல் நேர்காணல் நடைபெறுகிறது.

பணியின் பெயர்: Customer Service Executive, Jr. Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent and Ramp Driver, Handyman

மொத்த பணியிடங்கள்: 495

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Graduate, Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

வாடிக்கையாளர் சேவை அதிகாரி – ரூ. 25,980

ஜூனியர் வாடிக்கையாளர் சேவை அதிகாரி – ரூ. 23,640

Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver – ரூ. 25,980

Handyman – உதவியாளர் – ரூ. 23,640

வயது வரம்பு:பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்: Ex-servicemen/ SC/ ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.aiasl.in/resources/Advertisement%20of%20Chennai%20Recruitment.pdf என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தின் முகவரி:

Office of the HRD Department,

AI Unity Complex,

Pallavaram Cantonment,

Chennai -600043

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் விவரம்

Customer Service Executive: 17.04.2023

Jr. Customer Service Executive: 18.04.2023

Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver: 19.04.2023

Handyman : 20.04.2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.