Redmi Smart Fire TV: 15 ஆயிரம் ரூபாய் விலை பட்ஜெட் ஸ்மார்ட் டிவி செக்மென்ட்டில் இது பெஸ்ட் ஆப்ஷன்!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
இந்தியாவில் தற்போது குடும்பங்கள் பலவற்றில் தற்போது ஸ்மார்ட் டிவி பயன்பாடு அதிகமாகிவருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன் அதிகரித்ததன் காரணமாகவே ஸ்மார்ட் டிவி விற்பனையும் அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் ஸ்மார்ட் டிவி வாங்கவேண்டும் என்றால் பல ஆயிரங்களில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் இப்போது பட்ஜெட் செக்மென்ட்டிலேயே நமக்கு ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. அதிலும் சீனா நிறுவனங்கள் பெரும்பாலும் அதிகம் செலுத்தும் செக்மென்ட்டாக ஸ்மார்ட் டிவி செக்மென்ட் மாறியுள்ளது.

சீனாவை சேர்ந்த Redmi நிறுவனம் அதன் Fire TV ஒன்றை 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் செக்மென்ட்டில் விற்பனை செய்கிறது. புத்தம் புதிய Fire OS உடன் பல ஸ்மார்ட் வசதிகள் கொண்டு இந்த டிவி விற்பனை ஆகிறது. இந்த விலைக்கு அதிகப்படியான வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் ரெட்மி வழங்குகிறது.
​டிஸ்பிளேஇது ஒரு 32 இன்ச் டிவி என்பதால் இந்த விலை மற்றும் அளவிற்கு ஏற்ப இதில் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் 32 இன்ச் LED ஸ்க்ரீன், 1366×768 Pixels வசதிகள் உள்ளன. மேலும் 60HZ Refresh rate, வைட் அங்கிள் போன்ற வசதிகள் இருப்பதால் சிறிய ஹால் அல்லது படுக்கை அறைகளில் பயன்படுத்த நன்றாக இருக்கும்.
​டிசைன்பட்ஜெட் ஸ்மார்ட் டிவி என்பதால் இதில் சாதாரண பிளாஸ்டிக் பாடி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறிய அளவு பெசல் இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாக உள்ளது. இதற்கு Wall Mount வசதியும் இருப்பதால் தனியாக நாம் வாங்க வேண்டும். இதே செக்மென்ட்டில் சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட் டிவி ஒப்பீடு செய்யும்போது இதன் எடை சற்று அதிகமாகவே உள்ளது.
முக்கிய வசதிகள்

இந்த டிவியில் இரண்டு USB type A port, 3.5mm AUX கேபிள் போர்ட், இரண்டு HDMI போர்ட், இரண்டு ஈதர்நெட் போர்ட் வசதி, டிவி அடியில் வெள்ளை நிற LED இண்டிகேட்டர், நேரடி பவர் பட்டன் போன்ற வசதிகள் உள்ளது.
சிறப்பு வசதிகள்இதில் 64 பிட் Mali G31 MP2 Quad Core Processor, Fire OS 7, 1GB RAM மற்றும் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் அளவு உள்ளது. இதைத்தவிர ஸ்மார்ட் ஹப் கண்ட்ரோல், PrimeVideo, Zee 5, SonyLIV, Youtube, Disney + Hotstar, Netflix போன்றவற்றுடன் கூடுதலாக 12,000 ஆப் வசதி உள்ளது.
ஆடியோ வசதிகள்இதில் Dolby Atmos Support உடன் இரண்டு 10W ஸ்பீக்கர் (20W) உள்ளது. இதனால் ஆடியோ திறன் நன்றாகவே இருக்கும். மற்ற விலை உயர்ந்த ஸ்மார்ட் டிவி உடன் ஒப்பீடு செய்யும்போது ஆடியோ தரம் குறைவாக இருந்தாலும் சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற வசதிகள் இதில் உள்ளன.
Redmi Fire TV Remote​Apple Airplay மற்றும் Miracast வசதியும் உள்ளதால் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தலாம். இதில் 4K அல்லது HDR திரை இல்லாதது பின்னடைவு. இதனுடன் வரும் ஸ்மார்ட் ரிமோட் OTT ஆப்ஷன், Alexa போன்ற வசதிகளுடன் வருகிறது.
​விலை விவரம் (Redmi Fire TV Price)இந்த டிவி இந்தியாவில் 13,999 ஆயிர ரூபாய்க்கு கிடைக்கிறது. இது பட்ஜெட் ஸ்மார்ட் டிவி என்பதால் மிகவும் குறைந்த விலைக்கு எவ்வளவு வசதிகள் தரமுடியுமோ அத்தனையும் இதில் அடக்கியுள்ளது. இதனால் பட்ஜெட் விலைக்கு சராசரி வசதிகளுடன் ஸ்மார்ட் டிவி ஆசைப்படும் மக்கள் இதனை தேர்வு செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.