AK 62: பெரிய இடத்தில் இருந்து வந்த பரிந்துரை: மகிழ்திருமேனிக்கு கிடைத்த ஏ.கே. 62 பட வாய்ப்பு

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
Magizh Thirumeni: மகிழ்திருமேனியை லைகா நிறுவனத்திடம் யார் பரிந்துரை செய்தது என்பது தெரிய வந்துள்ளது.

​ஏ.கே. 62​அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டே ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. படப்பிடிப்பை துவங்க வேண்டிய ஜனவரி மாதத்தில் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். அதன் பிறகும் யாரும் எதிர்பார்க்காத மகிழ்திருமேனிக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

​உதயநிதி ஸ்டாலின்​விக்னேஷ் சிவன் போக, மகிழ்திருமேனி எப்படி வந்தார் என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வைத்து கலகத்தலைவன் படத்தை இயக்கினார் மகிழ்திருமேனி. அதை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். அந்த படத்தை அடுத்து மீண்டும் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் பண்ண ஆசைப்பாட்டாராம் மகிழ்திருமேனி.

​லைகா​
உதய்ணாவை வைத்து மீண்டும் படம் இயக்க விரும்புகிறேன் என ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திடம் தெரிவித்தாராம் மகிழ்திருமேனி. அவர்களோ, மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேரமும் மக்கள் சேவை செய்யப் போகிறார் உதய்ணா என்றார்களாம். அத்துடன் நின்றுவிடாமல் லைகா நிறுவனத்தை அணுகி மகிழ்திருமேனி நல்ல இயக்குநர், யூஸ் பண்ணிக்கோங்க என பரிந்துரை செய்தார்களாம்.
​அஜித்​HBDChiyaanVikram: ஹேட்டர்ஸே இல்லா நடிகர் விக்ரம்: பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான்அஜித் சார் படத்தை தயாரிக்கிறோம், உங்களிடம் கதை இருக்கா என லைகா கேட்க, ஒன்லைனர் சொல்லியிருக்கிறார் மகிழ்திருமேனி. அது அவர்களுக்கு பிடித்துப் போகவே கதையை தயார் செய்யுங்கள் என்றார்களாம். அஜித்தை அணுகி சார் மகிழ்திருமேனி உங்களுக்கு கதை வைத்திருக்கிறார் என்று கூற அவரோ, உங்களுக்கு பிடித்திருப்பது தான் முக்கியம். உங்களுக்கு பிடித்திருந்தால் நான் நிச்சயம் கதை கேட்கிறேன் என்றாராம்.

​அறிவிப்பு​அஜித் ஓகே சொன்னதும் மகிழ்திருமேனிக்கு அலுவலகம் போட்டுக் கொடுத்து கதை எழுதுவதை துவங்கச் சொல்லியிருக்கிறார்கள். முழுக்கதையையும் கேட்டு திருப்தி ஏற்பட்ட பிறகே படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். விக்னேஷ் சிவன் விஷயத்தில் செய்ததை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறதாம் லைகா.
​தல பிறந்தநாள்​ஏ.கே. 62 பட அறிவிப்பு ஏப்ரல் மாதம் வரும் என லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வராதாம். அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி அறிவிப்பை வெளியிட்டு அஜித் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை மாதங்கள் காத்திருந்தோம், இன்னும் சில நாட்கள் தானே, பரவாயில்லை என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

​Ajith: ஏ.கே. 63 பட டீலில் கையெழுத்திட்ட அஜித்: இயக்குநர் யார் தெரியுமோ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.