பென்னிகுயிக் சிலை மூடப்பட்டது ஏன்? எடப்பாடி எழுப்பிய கேள்வி – துரைமுருகன் அளித்த பதில்!

லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுயிக் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளதாகவும், சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த

இது தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

தனது சொத்தை விற்று தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களின் பசியையும், தாகத்தையும் தீர்க்க முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர் பென்னி குயிக். அந்த நன்றியை மறக்காத தென் மாவட்ட மக்கள் தங்களது குடும்பத்தில் ஒருவராக இப்போதும் பென்னி குயிக்கை நினைத்து வருகின்றனர்.

பென்னி குயிக்குக்கு தமிழ்நாட்டில் மரியாதை செலுத்துவது போல் அவரது நாட்டிலும் மரியாதை செலுத்தும் விதமாக லண்டன் மாநகரில் உள்ள கேம்பர்லி பார்க்கில் மார்பளவு சிலை வைக்கப்பட்டது.

அட்லான் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டு தமிழக அரசு 26 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது. 20 லட்சம் ரூபாய் பென்னி குயிக் குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 92 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. மீதமுள்ள தொகையை செலுத்தாததால் அந்நிறுவனம் லண்டன் மாநகராட்சியிடம் புகார் அளித்து சிலையை மூடியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இன்று சட்டப் பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “முல்லைப் பெரியாறு அணையை சொந்த செலவில் கர்னல் ஜான் பென்னிக் குயிக் கட்டி முடித்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மணிமண்டபம் அமைக்கப்பட்டது, லண்டனில் திமுக அரசு மார்பளவு சிலையை திறந்து வைத்தார்கள். அவரின் சிலை கருப்பு துணியால் மூடப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. அவமானப்பட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. உண்மை நிலை என்ன? மூடிய சிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேசினார்.

இதற்கு நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பதிலளித்தார். “அரசு விவரங்களை அறிந்து, நடவடிக்கை எடுத்து சபைக்கு அறிவிக்க வேண்டியதை முறையாக அறிவிக்கும்” என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.