இஸ்லாமாபாத்,- பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை, லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பாகிஸ்தானில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பெட்ரோல் விலை தற்போது, பாக்., ரூபாய் மதிப்பின்படி, ௧ லிட்டர் 282 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இதே போன்று, டீசல் விலை லிட்டர் 293 ரூபாயாக உள்ளது.
Advertisement