Trisha:ஏ.எல். சூர்யா மனைவியா த்ரிஷா?: ஒரே வார்த்தையில் சோலியை முடித்த அம்மா உமா!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
Trisha mother explanation:த்ரிஷாவும், நானும் காதலர்கள், விரைவில் திருமணம் என ஏ.எல். சூர்யா பேசி வருகிறார். இந்நிலையில் த்ரிஷாவின் அம்மா உமா இது பற்றி பேசியுள்ளார்.

​​த்ரிஷா​மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஏ.ஏல். சூர்யா என்பவர் த்ரிஷா பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்.

​Ponniyin selvan 2: வந்தியத்தேவன் கார்த்திக்கு குந்தவை த்ரிஷா செய்த அநியாயம்: என்னம்மா இப்படி பண்றீங்களேமா

​மனைவி​த்ரிஷா பற்றி சூர்யா கூறியதாவது, நானும், த்ரிஷாவும் காதலிக்கிறோம். வரும் நவம்பர் மாதம் எங்களுக்கு திருமணம். நாங்கள் அடிக்கடி போனில் பேசுவோம். தற்போது எங்களுக்கு இடையே சண்டை. அதனால் சரியான பேச்சுவார்த்தை இல்லை. என் மனைவியாகப் போகும் த்ரிஷாவை லியோ படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
​ரசிகர்கள்​த்ரிஷா என் மனைவி என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் ஏ.எல். சூர்யா. மேலும் தளபதி விஜய் தன்னை பார்த்து பொறாமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார். தலைவியின் கெரியர் சூப்பராக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் யாருய்யா இந்த ஆளு, எப்ப பார்த்தாலும் த்ரிஷா என் பொண்டாட்டினு சொல்லிக்கிட்டு இருக்காரு என ரசிகர்கள் எரிச்சல் அடைந்தார்கள்.
​உமா​சூர்யா சொன்ன எதையும் த்ரிஷா கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் த்ரிஷாவின் அம்மா உமா இது பற்றி பேசியிருக்கிறார். அந்த நபர் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ளவே கூடாது. மக்களுக்கு உண்மை தெரியும். அப்படி இருக்கும்போது இதில் தலையிட்டால் விஷயம் பரபரப்பாகிவிடும் என கூறியிருக்கிறார். உமா சொன்னதை கேட்ட ரசிகர்களோ, அம்மா சொல்வது தான் சரி, ஒரே வார்த்தையில் சோலியை முடிச்சுட்டார் என்கிறார்கள்.
​லியோ​
14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் அந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் த்ரிஷாவை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார் ஏ.எல். சூர்யா. அவர் பேச்சை படக்குழு காதிலேயே வாங்கவில்லை. இந்நிலையில் தான் சூர்யாவை கண்டுக்க வேண்டாம் என்கிறார் அம்மா உமா.

​Trisha: த்ரிஷாட்ட அதை மட்டும் கேட்காதீங்க, சொல்ல மாட்டாங்க: லோகேஷ் கனகராஜ்

​திருமணம்​த்ரிஷாவுக்கு 40 வயதாகிவிட்டது. அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். சினிமாவை காதலிக்கும் த்ரிஷாவுக்கு தன் கெரியரை ஆதரிக்கும் நபர் கணவராக வர வேண்டும் என்று விருப்பம். அத்தகைய நபர் சீக்கிரம் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.