வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் தற்போது வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்த வெயிலின் தாக்கத்தால் முதியோர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.வரும் நாட்களில் இயல்பான வெப்ப நிலை மேலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக முதியோர் கர்பிணிகள், குழந்தைகள், நண்பகல் 12 முதல் மதியம் 3 வரை வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இளநீர், மோர், தண்ணீர் போன்றவரை அடிக்கடி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 20-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும் இன்றும், நாளையும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.