கொரோனா: 60 ஆயிரத்தை கடந்த பாதிப்புகள் – சுகாதர அமைச்சகம் பகீர் லிஸ்ட்.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டில் பரவிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவியது. கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். பலநாடுகளின் பொருளாதாரமும் சரிவைக் கண்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து
கோவிட் 19
வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் சிறிது காலத்திலேயே கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியது.
கொரோனா வைரஸ்
அழிக்க முடியாது ஒன்று, குறிப்பிட கால எல்லையில் அந்த வைரஸ் மரபணு மாற்றம் பெற்று மீண்டும் மீண்டும் பரவக்கூடும் என அதன் பின்னர் தான் தெரியவந்தது.

கொரோனா 2ம் அலையின் போது இந்தியாவில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் இருப்புகள், படுக்கை வசதி இல்லாமை உள்ளிட்ட காரணிகளும் உயிரிழப்புகளுக்கு முக்கிய பங்காற்றின. இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் கண்ட பஞ்சத்தை காட்டிலும், கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்தன. அந்த அளவிற்கு கொரோனா மரணங்கள் நாட்டை உலுக்கின.

இந்த சூழலில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த

ஞாயிற்றுக்கிழமையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 10,093 கோவிட் -19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படியாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி உற்பத்தியும் தற்போது மீண்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்தசூழலில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,111 தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 8.40% ஆகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 4.94% ஆகவும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி தற்போது 60,313 ஆக உள்ளது. நாட்டில் செயலில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை மொத்த நோய்த்தொற்றுகளில் 0.13% ஆகும். சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 27 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதில் குஜராத்தில் 6 பேர், உத்தரபிரதேசத்தில் நான்கு பேர், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் தலா 3 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து மொத்த இறப்பு எண்ணிக்கை 5,31,141 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,313 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, இந்த நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,35,772 ஆக உள்ளது. தேசிய மீட்பு விகிதம் 98.68% ஆகவும், இறப்பு விகிதம் 1.18% ஆகவும் இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.