முதலிரவின் போது மாப்பிள்ளை பெண்ணை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த நிகழ்வு மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் ஒரு ஜோடிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் முதலிரவு அன்று மாப்பிள்ளை பெண்ணின் வயிற்றில் தையல் போடப்பட்ட தழும்பு இருப்பதை கவனித்தார்.
அதுகுறித்து கேட்டபோது காயம் ஏற்பட்டதால் சிறிய அளவில் தையல் போடப்பட்டதாக மணமகள் சமாளித்தார். ஆனால் மாப்பிள்ளை விடாமல், கோபத்துடன் கேட்கவே மணப்பெண் நடந்ததை எல்லாம் ஒப்புக்கொண்டார்.
அப்பெண் ஏற்கனவே ஒருவரை காதலித்து கர்ப்பம் அடைந்தார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவர்களின் காதலை ஏற்கவில்லை. எனவே, சில மாதங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை கலைத்துள்ளனர்.
ஆனால் அதை வெளியே சொல்லாமல், உண்மையை மறைந்து இளைஞருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் பெண்ணை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பெண்ணின் வீட்டார் கணவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்ததோடு ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
newstm.in