கர்நாடகாவில் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.
அதன் பிறகு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், அன்ன பாக்கியா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு உள்ள குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அதன் பிறகு வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாயும், பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் எனவும் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பிறகு நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த வாக்குறுதிகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் ராகுல் உறுதி கொடுத்துள்ளார்.